Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 MAR 1941
இறப்பு 09 SEP 2025
திருமதி சுசிலாதேவி இராஜசுந்தரம்
வயது 84
திருமதி சுசிலாதேவி இராஜசுந்தரம் 1941 - 2025 Ipoh, Malaysia Malaysia
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 மலேசியாவைப் பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் கொக்குவில் , கோயம்புத்தூர் இந்தியா மற்றும் New Jersey ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி இராஜசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 

இருட்டில் ஒளியாக,
இரவு வானில் திங்களாய்,
இடிக்கையில் நிழலாக,
எங்களின் வழிக்காட்டியாய்
ஆயிரம் கஷ்டங்களையும் தாங்கி
 எங்களை வாழ்க்கையில் உயர்த்த செய்தீர்கள் அம்மா!!!

 மென்மையான பாசமும்,
உறுதியான மனமும் கொண்டு,
 எங்களை ஆளுமையாக மாற்றினீர்கள்!

 காலம் கடந்து சென்றாலும்,
உங்கள் அன்பும் , வழிகாட்டலும் அழியாது நிலைத்து நிற்கும்.
பிள்ளைகளின் நம்பிக்கையாய்,
பேரப்பிள்ளைகளின் வழிகாட்டியாய்
என்றுமே எங்களுள் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்!

 உங்கள் ஆன்மா சாந்தியடைய
 பிரார்த்திக்கின்றோம் 

You were the light in our darkness,
The calm within our storms,
With love and strength, you raised us,
And shaped our hearts and forms.

Gentle in heart, strong in will,
Your wisdom guides us still.
To children, strength; to grandchildren, light;
To Students, Wisdom;
To all, endurance shining bright.

Forever, you live within us,
A presence that will never part,
 Etched in our hearts and memories,
The legacy of your loving heart & strength

அன்னாரின் மறைவில் நாம் துயருற்று இருந்த வேளையில், நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் , முகநூல், மின்னஞ்சல், மலர்வளையங்கள் , RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர் , நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு உள்ளங்களுக்கு எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.