5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுங்கேணி வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தனபாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அப்பா
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
எம்மை விட்டு பிரிந்திட உமக்கு
எப்படி மனம் வந்தது
வையகத்தில் வாழ்ந்து வானடைந்து
ஐந்து ஆண்டுகள் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் எமை விட்டு
எமையெல்லாம் அன்பாலும், பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீங்கவில்லை
நீண்ட தூரம் சென்று விட்டீர்
எமைக் காக்க யாருண்டு
எத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் உமக்கு ஈடாகுமா?
நல்வழி காட்டிய தந்தையே
உமை மறக்க முடியவில்லை
உம் பிரிவுத்துயர் தீரவில்லை
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்