2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
24
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுங்கேணி வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தனபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-11-2022
ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில
மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்