1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1961
இறப்பு 02 NOV 2020
அமரர் சுப்பையா தனபாலசிங்கம்
வயது 59
அமரர் சுப்பையா தனபாலசிங்கம் 1961 - 2020 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுங்கேணி வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 ஆருயிர் அப்பாவை ஆண்டவன் அழைத்து
ஆண்டொன்று ஆன போதும்
அன்பாய் அனைத்த கரங்களை இழந்த போதும்
அந்த அன்பால் கிடைத்த வார்த்தைகளையும்
கிடைத்த முத்தங்களையும்
கிடைத்த புன்னகையையும்
அன்பான அந்த நினைவுகள்
அப்படியே எமது அடிமனதில்
ஆழமாக பதிந்து விட்டது அப்பா

ஆண்டுகள் ஆயிரமானாலும்
ஆண்டவனாலும் அதை மட்டும்
திருப்பி கொடுக்க முடியாது அப்பா
அந்த நினைவுகளை நினைக்கும் போது
கார் மேகங்களின் கண்ணீர் போல்
கண்களால் கண்ணீர் மழை கொட்டுகின்றது அப்பா

அப்பா அப்பா என்று அழைத்த உதடுகள்
உண்மையை உணர மறுக்கின்றன அப்பா

எங்கிருந்தாவது வரமாட்டீர்களா என்றெண்ணம்
எமது நெஞ்சங்களில் அடிக்கடி தோன்றுகின்றது அப்பா
ஆனால் அதற்கு ஆண்டவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டான்
அப்பா உங்களை ஆண்டவன் அமைதியாக உறங்க வைக்க
அவன் பாதங்களை வேண்டி வணங்குகின்றோம்

மனைவி பிள்ளைகள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 05 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 30 Nov, 2020