Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 SEP 1924
இறப்பு 14 MAR 2016
அமரர் சுப்பையா செல்லத்துரை
முன்னாள் ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், பொல்காவலை தமிழ் பாடசாலை
வயது 91
அமரர் சுப்பையா செல்லத்துரை 1924 - 2016 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 04-04-2025
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா Toronto Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் சுதுமலையில் பிறந்து, பின்பு பொல்காவலை, ஈச்சமோட்டை ஆகிய நகரங்களில் வசித்து, 2020ல் கனடாவிற்கு குடிபெயர்ந்து, அங்கு ரொரன்ரொ (Toronto) மொன்றியல் (Montreal) ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த திரு. சுப்பையா செல்லத்துரை ஆசிரியர் அவர்கள் பங்குனி 14, 2016 அன்று, ஒன்பது (9) ஆண்டுகளுக்கு முன்பு தன் பூவுடலை நீத்ததை இன்று நினைவு கூறுகின்றோம்.

Death cannot kill what never dies. Soul never dies.
Soul merge with divine like river merge with sea.

எங்கள் நினைவுகளில் நீங்கள்
பொறுப்பான தந்தையாய்,
வழிகாட்டும் ஆசானாய்,
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் உதாரண புருஷராய்,
மானிட வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றிய
பாக்கியசாலியாய் என்றென்றும் நீங்காது நிலைத்து நிற்பீர்கள்.

மிக நீண்ட காலமாக ஆசிரியராக சேவை ஆற்றிய நீங்கள், அதே சமயத்தில் ஒரு மாணவனாகவும் வாழ்ந்தது இவ் உலகு அறியாத உண்மை, ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுதும் திரு. பிரேம் ராவட் (Mr. Prem Rawat) அவர்களின் மாணவனாக இருந்து மானிட வாழ்க்கையின் மகிமையையும் ஒவ்வொரு மூச்சின் அருமையையும் நன்றாகவே கற்றுக்கொண்டு, கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பேரானந்தத்தையும் பெற்றீர்கள். 

உங்கள் ஆத்ம சாந்திக்காக கீழ்வரும் இணைப்புகளை (link) இவ்வுலக மக்களும் தாம் வாழும்போதே அமைதியையும், ஆனந்தத்தையும் பெற சமர்பிக்கின்றோம். Rest in peace (RIP - அமைதி) என்பது நீத்தாற்கு மட்டும் அன்றி வாழ்வோர்க்கே மிகவும் அவசியமானது என்ற உங்கள் ஆசானின் கூற்றை நினைவு கொள்கின்றோம்.

தைரியம் இருக்கும் இடம்: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராஜன் செல்லத்துரை - மகன்
வித்தியாதரன் செல்லத்துரை - மகன்
மணிமேகலா புவேந்திரலிங்கம் - மகள்
மணிமேகலை யோகரமணன் - மகள்

Photos