Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 SEP 1924
இறப்பு 14 MAR 2016
அமரர் சுப்பையா செல்லத்துரை
முன்னாள் ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், பொல்காவலை தமிழ் பாடசாலை
வயது 91
அமரர் சுப்பையா செல்லத்துரை 1924 - 2016 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா Toronto Montreal  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவுகூறல்.

குடும்பம் என்னும் கோயினிலே
மனை சிறக்க வாழ்ந்த எங்கள் அப்பாவே
ஆண்டுகள் ஐந்து போனாலும்
அழியாது உங்கள் நினைவு
அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்கள் அப்பா
சிவனே சீவனாய் வருகிறது உடம்பில்
சீவன் உடம்பை விட்டவுடன் சிவனாகின்றது
சிவம் எங்கும் எல்லோருள்ளும் இருக்கின்றது
நீங்களும் சிவனாய், சீவனாய் எம்முள்ளிருந்து
எப்போதும் எமக்கு வழிகாட்டுகின்றீர்கள்
மறைந்தது அழியக்கூடியதே
மறையமுடியாதது அந்த அழிவற்ற ஜீவன்
அழிவற்ற அச்சொரூபத்தில் என்றும்
எம்முள் நீங்காத நினைவாய், அன்பாய்,
வாழ்வதற்கு நன்றி அப்பா....
எத்தனை ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos