Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 SEP 1924
இறப்பு 14 MAR 2016
அமரர் சுப்பையா செல்லத்துரை
முன்னாள் ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், பொல்காவலை தமிழ் பாடசாலை
வயது 91
அமரர் சுப்பையா செல்லத்துரை 1924 - 2016 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களை இழந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன
நம்பமுடியவில்லை
உங்களுடன் அம்மா சங்கமமாகி ஆறு மாதமாகி விட்டது
தாங்க முடியவில்லை 
நாங்கள் உங்கள் நினைவிலேயே வாழ்கின்றோம்

உங்கள் அறிவுரைகள் உருவெடுத்து எங்கள் 
வாழ்க்கையில் பரிணமிக்கின்றன
நீங்கள் இங்கில்லாவிடினும் எங்கோ இருக்கின்றீர்கள்
என்ற நினைவில் வாழ்க்கின்றோம்
ஆம் ஆத்மா அழிவதில்லையே

“தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து
 எம்மை கற்றோர் அவையில்
முதன்மை பெற்றவர்களாக இருக்கச் செய்தீர்கள்

உங்கள் கடின உழைப்பு, உதவி புரியும் இயல்பு,
மாணவர்களுக்கு வழிகாட்டும் முன் மாதிரி,
அன்பான உள்ளம், கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடான வாழ்க்கை,
இறைவனை உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கை நெறி
இன்றும் எம் நினைவில் இருந்து
வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது

உங்கள் இறுதிநாட்களின் விருப்பமான
மூத்த பேத்தியின் மருத்துவ படிப்பு
உங்கள் ஆசியால் விரைவில் தொடங்கவுள்ளது
இது நடக்கும் என்று முன் கூட்டியே இயம்பிய
உங்கள் வார்த்தைகளை நாங்கள் நினைவு கூருகின்றோம்

”ஊரும் நித்தியமன்று, பந்துக்களும் நித்தியமன்று
தவங்கிடந்து ஈன்று தாய் தந்தையர்களும் நித்தியமல்லர்,
மனைவியரும் நித்தியமல்லர், புத்திரர்களும் நித்தியமல்ல,
பொருளும் நித்தியமன்று
இவ்வுலகத்திலே எவரும் நித்தியமல்லர்
கடவுளே உம்முடைய திருவடியே நித்தியமானது”
என்று பொருளில் பட்டினத்தடிகளார் என்ற
சித்தர் திருவேகம்பமாலையில் பாடியிருக்கின்றார்

அதன்படி
”வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
எனும் மற்றுமொரு வள்ளுவர் வாக்கிற்கு இணங்க
எங்கும் நீங்க மற்று இருக்கும் தெய்வத்துள்
ஒன்றாக கலந்து தற்போது இருக்கின்றீர்கள்

உங்கள் ரூபமற்ற வாழ்க்கை அம்மாவுடன்
தெய்வங்களின் வாழ்க்கை நெறிப்படி தொடரட்டும்

நீங்கள் எங்கோ வாழ்கின்றீர்கள் என்ற நினைவில்
நாம் அமைதியடைய முயல்கின்றோம், ஆனால்
முடியவில்லை மீண்டும் முயல்கின்றோம் அது
உங்கள் ஆசியால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்

Once, Ambassador of Peace, Prem Rawat was asked about a way to remember our departed loved ones.

He said, think of them as the earth and the moon. The moon came from the earth, and as it separated, it went out and it is just there. It is not part of the earth anymore, but it is just there, going around this earth beautifully affecting it. Every night, every day, making the tides, the life, the motion. All you have have to look up and see the reflection of the sun on this beautiful surface, glowing. Glowing.

He further said that for those who go, think of them the same way. Your little world, now they are the moon and hopefully, they are going to affect you in the most beautiful way that you will remember their memory, the tides, the life, the drama. And on those particular nights when it is really dark, they will glow and there will be a little light for you. Not only to admire but may be see by.

தகவல்: பிள்ளைகள்

Photos

Notices