யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வீட்டுவாசல் வந்ததும் தேடிப்பார்த்து
என்னை நாடிவந்து அன்பைப் பொழீவீர்களே ஐயா
பொன்சிரிப்பான வதனம் காட்டி
எம்மை மகிழவைப்பீர்களே...
இன்சொல்பேசி இதயத்தை மென்மையாக்குவீர்களே!
ஐயா என்று அழைத்துப் பார்க்கின்றேன்
அருகில் நிற்பது போன்ற உணர்வு.
அம்மாவின் பிரிவு என்னவென்று அறியாது
கலங்கி நிற்கையில் உங்களின்
பிரிவை எப்படித் தாங்க...
வண்ணமான மேனி வாடியதேனோ!
திண்ணமான பேச்சொலி மறைந்ததேனோ!
கருவிழிக் கண்கள் மூடியதேனோ!
கருணையுள்ளம் அமைதியானதேனோ!
காலங்கள் கடந்தோடி எம் கோலங்கள் மாறினாலும்
உங்களின் செல்வங்கள் நாங்கள்..
நீங்கள் இருவரும் எம் உள்ளத் தெய்வங்கள்...
ஏழேழு ஜென்மங்களுக்கும் மானிடப்பிறப்பு உள்ளதானால்
அத்தனை பிறப்புக்களிலும்
நாங்களே உங்களின் பிள்ளைகளாய் வாழ
இறைவனின் வரம் வேண்டுகின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்