யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நகர்ந்தாலும் நம்மை
விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில் நிலை
குலைந்து போகின்றோம் ஐயா
கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சக் கூட்டினில் அழியாத ஓவியம் ஐயா...
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில்
வாழ்ந்து பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்,
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்...
அமைதியில் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில்
அன்பு ஓவியமாக இருந்தீர்கள்
பூத்த உங்கள் கொடிகள் தவிக்குதய்யா
பாசமான நினைவுகளை மட்டும்
எம்மிடம் விட்டு சென்றீர்களே,
இனி எப்போ உங்கள் முகம் காண்போம் ஐயா...
கலையாத நினைவுகளுடன் உதிரும்
கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
ஆண்டவனை பிராதிக்கின்றோம்!