14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பையா நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, இந்து ஆரம்ப பாடசாலை
வயது 75
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், மடத்தடி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா நடராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதின்நான்கு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஓம் சாந்தி சாந்தி