யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், மடத்தடி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா நடராஜன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!
11 ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?
இன்பமாய் நாம் வாழ
இனியவை பல செய்தீர்
இனியவரே உங்கள் திருவதனம்
எப்படி நாம் மறப்போம்
மறக்கவும் முயல்வோமோ
மறுக்கவும் முயல்வோமோ?
நீங்கள் இல்லாதக் குறைதீர்க்க
பாரினிலே யாருண்டு?
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
ஓம் சாந்தி சாந்தி