10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, இந்து ஆரம்ப பாடசாலை
வயது 75
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், மடத்தடி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா நடராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர் அணையாது
என்றுமே.. எம் மனதில்
பாசமிகு கணவனாய்...தந்தையாய்...
அருமைச் சகோதரனாய்...
ஊருக்கு உபகாரியாய்...
கண்டிப்பான நல் ஆசானாய்...
நற்றவான் குளத்து மீனாய், நாள் தோறும்
பொழிந்து மின்னி வாழ்ந்தவர்... வாழ வைத்தவர்...
நேர்மையின் உறைவிடம் நடராஜன் எனும்
நாமங்கொண்ட எம் குலவிளக்கு
அணைந்தும் அணையா ஜோதியாய்
நடராஜப் பெருமானாகிவிட்டார் என்றெண்ணி
கண்காணாத் தெய்வமது கரந்து ஈயும்
காலத்தின் விதியீது கலங்கி என்ன?
புண்ணியர்கள் போனார்கள்
போகும் மட்டும் போனவரை அஞ்சலித்து
அமைதி கொள்வோம்..!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
ஓம் சாந்தி சாந்தி