2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுந்தரலிங்கம் மதியழகன்
(மதி)
வயது 59

அமரர் சுந்தரலிங்கம் மதியழகன்
1961 -
2021
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
37
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 28- 01-2023
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரலிங்கம் மதியழகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
எத்தனை உறவுகள் இருந்தாலும் தோள்சாய அப்பா
இல்லையே என கதறி அழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்கவிட்டு வழி தெரியா தூரம்
விரைந்தோடி சென்றதேனோ ?
அன்புள்ளங்கொண்ட ஆருயிர் அப்பாவே!
நீங்கள் இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வற்றாத ஊற்றாக வலி தந்த காயங்களுடன்
ஒவ்வொரு நாளும் இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்