எமதன்புக்குரிய சுமதி உங்கள் இனிமையான நினைவுகளைச் சுமந்த வண்ணம் கடந்த காலத்தில் எமது உறவுப்பாலம் எப்படி இருந்தது என்று ஒரு கணம் சுழன்று ஓடியது. சிறுவயது முதலே ஒன்றாகப் பழகினோம். சொந்த பந்தங்களை தொடர்பில் வைத்திருந்தீர்கள். எப்பவும் அன்பாகவும், ஆதரவாகவும் பேசுவீர்கள். நாங்கள் குடும்பத்துடன் கனடா வரும் வேளையில் உற்சாகமாக உறவுகளை ஆதரிப்பதில் உங்களுக்கு யாரும் நிகரில்லை. நாங்கள் சந்தித்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நெஞ்சை பிளக்கும் ஒரு செய்தி வந்தது. தாங்கமுடியாமல் இருக்கிறது. நீர்க்குமிழி போன்ற மனித வாழ்வு. ஆனால் இந்த வயதில் எங்களை விட்டு எங்கு சென்றீர்கள். உங்கள் அன்பான, பாசம் மிகுந்த ஆன்மா எல்லாம் வல்ல எம்பெருமான் பாதக்கமலங்களை அடைக்கலம் பெற்று சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவில் துயரத்தில் வாடும் பாசமான கணவருக்கு ஆழ்ந்த ஆனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி. உஷா, தேவன், கீர்த்தனா, நீலன்
Our heartfelt condolences to Sumathi’s family and friends. May her soul Rest In Peace! ஓம் சாந்தி!