9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!
மகனே என அணைக்க முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
தகவல்:
குடும்பத்தினர்