
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆண்டுகள் எட்டு ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா!
வாழ்ந்த கதை முடியும்முன்
சென்றிடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியாக!
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைத்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோம்!
எட்டாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!