யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமிருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே 
உன்னைப்போல்
தரமான மகன் 
ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க 
விட்டதில்லை- இன்று
காலனுடன் 
சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
தக்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு
சேவை செய்யும் 
சேவகனாய்
பாசமாக பணி விடைகள் பல 
செய்தாய்
இன்று நேசம் மறந்து
நெடுதூரம் சென்றாயே!
நீ பிரித்த இடைவெளியை மகனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தை 
கூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல் 
கொண்ட அன்பினை
அளந்திட முடியுமா?
காலங்கள் பல கடந்தும் கண்ணீருடன்
கண்கள் உன் நினைவுடன்
எத்தனை 
ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில் 
நீங்காமல் நிறைந்திருப்பாய் மகனே
நீ 
மறைந்த நாள் முதலாய் நினைவிழந்து வாழும்
உனது உறவுகளின் கண்ணீர்த்துளிகள்
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....