அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் தன் மங்கா சிரிப்பின் தரம் மாறா சுடர் ஒளியாய் தன் அன்பினால் அனைவரையும் அரவணைத்து வாரி ஈற்கும் ஓர் பாசப்பொக்கிஷம்யாய் திகழ்ந்து நின்று வந்த அக்கா சுகந்தி , சுகந்தி எண்று கூறி தன்னை நாடி வரும் அனைவருக்கும் நல்ல தோர் அறுசுவை விருந்து தரும் உணவுக் அரசி அன்னபூரணியாய் . தரணியில் இன்னல் படும் அனைத்து மக்களுக்கும் உதவிடும் நம் வீட்டுச் செல்வச் சீமாட்டியாய் நம்மவர் கெல்லாம் ஓர் வழிகாட்டும் ஒர் கலங்கரை விளக்ஒளி யாய் ஒளி தந்த ஓர் ஒப்பற்ர பொக்கிஷமாய் நின்ற எனதருமை அன்னை என்னை பெறா தாய் கண்ணிமைக்கும் நேரம் எம்ஐ எல்லாம் பரிதாபமாய் பதை பதைக்க விட்டு அவசர அவசரமாய் சொற்க விட்டு வாசல் படி தேடி விரைந்து சென்ற தேவை என்ன. ............ கரம் கொண்டவர் துரை அண்ணா மதிமயங்கி திக்கி திணறி திகைத்து நிற்க பாச மகள் தரண்யா நிலைகுலைந்து செய்வ தறியா செயலிழந்து நொறுங்கி நிற்க தம்பி (பேறாமகன்)நிரோ தூர்ந்து துவண்டு தடம் மாறி திக்கி தவித்து கண் விழி கருகி நிற்க . வளி மிழா தூரம் போனதன் நோக்கம் என்ன .காணவரும் அனைவரின் கண்களை குளமாகி அன்புக் கண்ணீரில் மூழ்கடித்து எம்மவரை கதறி உறைய வைத்து இறைவனடி சேர்ந்ததன் தேவை என்ன. உங்கள் பிரிவை வாயினால் கூற முடியா ஊமையாய் பரிதவித்து நிலைகுலைந்து அனாதையாய் நிற்கும் அன்பு உடன்பிறவா சகோதரன் (பேறா மகன் ) நிரோஜன் & சகோதரி -தயாராணி சுகி
குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்