Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 OCT 1943
இறப்பு 21 DEC 2018
அமரர் சுப்பிரமணியம் கனகரட்னம்
வயது 75
அமரர் சுப்பிரமணியம் கனகரட்னம் 1943 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கனகரட்னம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களை நாம் இழந்த துயரை
ஈடுசெய்ய இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய் பாசத்தின்
பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!

எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
வசந்தகாலம் என்றால் அது உங்களுடன்
வாழ்ந்த காலம் தானே! வாழ்க்கை என்பது
இறைவன் அவன் வகுத்தவரை தானே!
இன்றோடு நான்காண்டு கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு,
பரிவு, பாசம் மாறாதே!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே வானில்
விண்மீனாய் இருந்து எம்
வாழ்வை வளப்படுத்துவீரே!  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்