யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கனகரட்னம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு சென்றதென்ன
எம்மை விட்டு போக
உங்களுக்கு எப்படி மனசு வந்தது
வலியின் வேதனையில்
புலம்பி தவிக்கின்றோம் இன்று!
அன்பும் பாசமும் ஊட்டி
எங்களை பண்பாக பாரினிலே
நேசத்துடன் வளர்த்தீர்களே,
கண்ணுக்குள் இருக்கும்
கண் இமை போல் எம்மை காத்து வந்தீர்களே!
உங்கள் கடமைகளை நேர்மையுடனும்,
பொறுமையுடனும் செய்து வந்தீர்களே
இன்று எல்லா பொறுப்புக்களை முடித்து விட்டேன்
என்ற பெருமையுடன்
எம்மை தவிக்க விட்டு சென்றீர்களே ஐயா!
அறிவுரை சொல்லவோ
புத்திமதி சொல்லவோ
எமக்கு நீங்கள் இன்றி தவிக்கின்றோம்,
எது நன்மை தீமை என்று சொல்ல
நீங்கள் இல்லையே!
உங்களை பற்றி மற்றவர்கள்
பெருமையாக சொல்ல தலை முறை உயர்கிறது தாத்தா!
எமக்காக ஒரு முறை வாருங்கள் ஐயா!
உங்களை நினைத்து இந்த உலகத்தில் தேடுகின்றோம் ஐயா!
எம் இதயம் தொட்ட எம் அன்புத் தெய்வமே!
உங்கள் நினைவு நிழலாய் தொடரும் எம்முடன்…..
சாந்தி! சாந்தி! சாந்தி!
கண்ணீர் அஞ்சலி அமரர் . திரு.சுப்பிரமணியம்.கனகரட்னம் அருட்பெருஞ் சுடரொன்றுஅணைந்ததுவோ! அன்றி அமைதி கொண்டு இடம் மாறி இறையடியில் கலந்ததுவோ! "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள்...