1961ம் ஆண்டுமே தினத்தில் லோகநாதன் அணண்ணர் தயாரரித்து வண்ணை கலைவவாணர் நாடக மன்றம் மாமனிதர் அரசையாவின் நெறியாள்கையில் அரங்கேற்றிய "சரியா? தப்பா"நாடகத்தில் அவர் நடிக்கவில்லை..என்னை ரகுநாதன் சின்னமணி ஆகிய பெருங்கலைஞர்களோடு அரங்கேற வைத்தார்..அடுத்து "ஒருபிடி மண்" நாடகத்தில் அவரும் பற்குணம் அண்ணரும் சேர்ந்து நடித்து என்னை நடிப்புக்கலையில் ஆர்வம் கொள்ளச் செய்தனர்.1963ல் "திப்பு சுல்தானாக" யாழ் மனோகரா திரைஅரங்கில் கர்ச்சித்த சிங்கம் இப்போது நீளுறக்கம் கொண்டுள்ளார். 1974ல் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சம்பந்தர் இல்லத்தின் நாடக நெறியாளராக கலைப்பணி யாற்றிய லோகநாதன் அணண்ணர் 1974ல் தனக்கு உடல்நலம் ஒத்துழைக்க மறுப்பதால் இனிமேல் ராசன் நீயே நெறியாளராக பணியாற்று என்று 22 வயதான என்னை நெறியாளராக்கி மகிழ்வித்தார். நன்றியோடு நான் வணங்கும் மனிதராக வாழ்ந்தவர் லோகநாதன் அண்ணர். தன்குடும்பத்தின் மூத்தோனாக தம்பியர் தங்கையரின் வாழ்வு செழிக்க உழைத்தவரை சிறவயதிலிருந்தே அறிந்தவன்..அவர் பிரிவால் நெஞசம் கனமுற்றிருக்கும் பிள்ளைகள் குடும்பத்தாருக்கும் அவரின் நெடுநாள் நண்பர் இரா பற்குணம் அவர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்லமுடியும் என்றேங்கும் நாச்சிமார்கோயிலடி இராசன்