

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லோகநாதன் அவர்கள் 05-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதினி, நந்தினி, குமணன்(கனடா), தாமோதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகேஸ்வரி, ஏகாம்பரநாதன், காலஞ்சென்ற பேரின்பநாதன்(லண்டன்), ருக்மணிதேவி, நாகேஸ்வரி(கனடா), குகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராஜா, காலஞ்சென்ற செளந்தரராஜன், இந்திராணி, செல்வராணி(சுவிஸ்), காலஞ்சென்ற தியாகராஜா, தேவராணி, யோகமலர்(லண்டன்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பூபாலசிங்கம்(கனடா), மல்லிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராஜசேகர்(நவந்தாமில் தட்டாதெரு), மதியழகன்(பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), இலங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துவாரகன், தனாதரன், யதுசாரகன், தரங்கினி, தர்மினி, புருஷோத், கீர்த்திகா, சுகிர்தன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.