மன்னார் அரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Denhelder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரெல்லா தயாளன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டு மூன்று ஆனாலும் உமது
எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே!
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றோம் உன் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உன் பிரிவால்
வாழ்கின்றோம் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றோம் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றோம் தனிமையாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு
எங்கள் கனவை உடைத்துவிட்டாய்
மரணத்தால்....
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா
ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
To Stella s Familiy, Our deepest condolance and may God bless her soul rest in Peace