

திதி: 11-02-2023
யாழ். வேலனை மேற்கு வேலனை 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Trimbach Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீவிஜயன் விநாயகமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே
ஏங்காத நாள் இல்லை உங்கள் அன்பிற்காய்
ஆண்டு இரண்டு போயிற்று ஆனாலும்
இப்பொழுதும் ஒலிக்கிறது உங்கள் குரல்
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும்
போதேல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா
எங்கள் கண்ணில் ஒரு
சிறு துளி வரக்கூடாது
என்றீர்கள்
இன்று எம் கண்ணில் ஒரு நதியே
ஓடுகின்றது
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என
ஏங்கித் தவிக்கிறோம்...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
My deepest condolences to your family