5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1971
இறப்பு 29 JUL 2017
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
வயது 45
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் 1971 - 2017 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:03-08-2022
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்தானாலும் உங்கள் நினைவு
அகலவில்லை ஒருபோதும்

கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர் சொரிகின்றோம்...

அப்பா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன....


அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே

அப்பா நாம் கண் திறந்த போது
உங்கள் திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதப்பா

அப்பா அப்பா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!

தகவல்: மனைவி, பிள்ளைகள்