3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1971
இறப்பு 29 JUL 2017
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
வயது 45
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் 1971 - 2017 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ   

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ அப்பா....  

கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்

மனைவி பிள்ளைகளோடு
சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு அப்பா...!   

எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டு
வழிதெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!

மூன்று ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...! 

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஒம் சாந்தி....! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!

தகவல்: மனைவி, பிள்ளைகள்