4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1971
இறப்பு 29 JUL 2017
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
வயது 45
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் 1971 - 2017 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 14-08-2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...

என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்

அப்பா உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

பாலகராக இருந்த நாம்
பருவ வயதடைந்து வளர்ந்து நிற்கின்றோம்
கூட நின்று தோள் தட்ட
துணையாக நீங்கள் இல்லையேயப்பா?

ஆருயிர் துணை இழந்து
அன்னை படும் துயரம்
ஆற்ற முடியாமல் கண்ணீரினில்
நாம் கலங்கி தவிக்கின்றோம்

நீங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நினைவு
உங்களை சுற்றி வரும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் நினைவால் வாடும் மனைவி, பிள்ளைகள்...

தகவல்: மனைவி, பிள்ளைகள்