2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன்
(ரவி)
வயது 45

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன்
1971 -
2017
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் பெயருக்கேற்ப
அன்பே மேன்மையென கனிவான புன்சிரிப்புடன்
பாசத்தின் ஒளியுருவாய் வாழ்ந்த
எம் உயிரே!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஈராண்டு காலமாகிறதே!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை
உனைக்காணமாட்டோமென
நம் இதயம் மட்டும் வலிக்கிறது!
உன் நினைவோடு வாழும் உன் மனைவி, பிள்ளைகள்!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.