Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
உதயம் 26 APR 1953
அஸ்தமனம் 24 AUG 2023
அமரர் சிவபாதம் வைத்திலிங்கம் (இந்திரன்)
வயது 70
அமரர் சிவபாதம் வைத்திலிங்கம் 1953 - 2023 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:31/08/2025

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Friedrichshall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் வைத்திலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!

உங்கள் நினைவினிலே
 உங்களை போல் ஆற்றுவார்
யாருமின்றி தவிக்கின்றோம்
நாமிங்கு ஓடி வாருங்கள்
அன்பு அப்பா...

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
 வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
 இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.

கண்ணீர் அஞ்சலிகள்