

மன்னாரைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி, லண்டன் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாய
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!