யாழ். கும்பிழாவளை மேற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் அமுதமலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-04-2023 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Salle paroissiale Jeanne d'Arc, 50 Rue de Torcy, 75018 Paris, France எனும் முகவரியில் மதிய போசனம் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.