யாழ். கும்பிழாவளை மேற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநாதன் அமுதமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-03-2024
என் உயிரில் கலந்தவளே
என் உணர்வில் உறைந்தவளே
உன்னத உறவே பாசத்தின் தாயே
பண்பே என் அன்பே அமுதா என்ற நாமம் கொண்ட
என் அமுதே இருபது வருட இனிய
இல்லறத்தில்
எங்கள் அன்புக்கு கிடைத்த பரிசு
மூன்று முத்தான குழந்தை
செல்வங்கள்
மகிழ்ச்சியாய் இருந்த நம் வாழ்வில்
மாயமாய் உனக்கு நோய் வந்ததோ
மரணம் உன்னை காவு கொண்டதோ
கல கல என சிரிக்கும் ஒலி
சிரிக்கும் ஒலி
அடங்கிப்போனதோ
அமுத மலர் என்ற அழகிய மலர் உதிர்ந்து போனதுவோ
என்னையும்
பிள்ளைகளையும் பரிதவிக்க விட்டு
பாசக்கிளி பறந்து போனது எங்கே???
அமுது அமுது
என்று நானும்
அம்மா அம்மா என்று உன் பிள்ளைகளும்
கதறுவது உன் காதில்
விளவில்லையோ
காலன் என்றகொடிய அரக்கன்
என் அமுத மலரை என்னிடம் இருந்து
பறித்தெடுத்து இன்று ஆண்டு ஒன்று
ஓராண்டு என்ன ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவுகள் எல்லாம்
என் ️ இதயத்தின் துடிப்பாக என்னுள்......