
திதி: 06-04-2025
யாழ். கும்பிழாவளை மேற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநாதன் அமுதமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் நினைவுகளோடு நான்️
2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
என் ஒளி விளக்கு
அணைந்து இன்று
ஆண்டுகள் இரண்டு
என் உயிரே
என் மூச்சே
என் பேச்சே
என்னையும் மூன்று
குழந்தை செல்வங்களையும்
பரிதவிக்க விட்டு
பாசக்கிளி பறந்ததேனோ
இதுதான் விதியோ
காலனுக்கும் கண்ணில்லையோ
அமுது என்று நான் அழைக்க என்
அருகில் இன்று நீ இல்லை
நான் நானில்லை
உறக்கம் மறந்து
உணவுமறந்து
உன் நினைவுகளை
நெஞ்சில் சுமந்தபடி நடக்கிறேன்
இரண்டு ஆண்டுகள் என்ன
இரண்டு யுகங்கள் ஆனாலும் நீதான் என் மனைவி
உன் ஆத்மா இறவன் பாதத்தில் இளைப்பாறட்டும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி️
உன் ஞாபகங்களோடு சிவன், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details