


கனத்த இதயத்துடன் கண்ணீருடனான பதிவு: மரணம் இத்தகைய அவசரமாகவும், அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் உங்களை அணைத்துக் கொண்டு விட்டதை மனதார ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மண்ணில் நீங்கள் தந்துவிட்டுச் சென்ற களங்கமற்ற அன்பு வானுயர உங்களுடன் வந்து வளம் சேர்க்கும். அன்னமிட்டு ஓயா உங்கள் அன்புக் கரங்கள் அக்கினியுடன் சங்கமமாகி அழிந்து போகினும், ஆண்டவன் சொர்க்கம் இன்று உங்களை அன்புடன் அணைத்து ஆறுதல் கொள்ளும். கண்ணீர் வடிக்கும் உங்கள் கணவர், மக்கள் காலம் மறவா கனவில் என்றும் வாழ்வீர். புண்ணியம் சேர்த்த புனிதவதி நீங்கள். சென்றது சோகம் ஆனால் செய்த நன்மை இப்புவியில் செறிவுடன் என்றும் வாழும். கண்ணீரை காணிக்கை ஆக்கி காலமெல்லாம் உங்கள் ஆன்ம ஈடேற்றத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கும் உங்கள் அன்பு நாகம்மா அன்ரி மற்றும் சாமினி (கொழும்பு)
Our heart felt condolences to yogan Athan and kids .May Gowrie Acca, s soul rest in peace ?.