திருமதி சிவஞானபதி தியாகராஜா
(சிவமணி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- மலையம் மக்கள்தனை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, கொளரியம்மாள் வித்தியாசாலை(திருக்கேதீஸ்வரம்),ஸ்ரீபார்வதி வித்தியாசாலை அரியாலை, ஏழாலை மகாவித்தியாலயம், மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை, மல்லாகம் மகாவித்தியாலயம்
வயது 88
திருமதி சிவஞானபதி தியாகராஜா
1937 -
2026
ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த எங்கள் நல் ஆசானுக்குக் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை
ஆரம்பக் கல்வியினை ஆர்வத்தோடு எமக்களித்த அன்னையே
அகர முதல
எழுத்தெல்லாம் அன்பாலே அறிய வைத்துச் சிகரம்
தொட வைத்த
சிவஞானபதி தியாகராஜா எனும்
சிவமணி ஆசிரியை அம்மாவே
ஈரைந்து திங்களாய் எமைச் சுமந்து பெற்று வளர்த்து வளம் பெற வைத்த எம் தாயும் நீங்களும் ஓரிடத்தில் கல்விப்பணி புரிந்து ஓராயிரம் ஆயிரம் மழலைகளை வாழ வழி செய்தீர்கள்
தோளோடு தோள் நின்று அன்பும் பண்பும் அடக்கமும் பொறுமையும் கொண்டு பணியாற்றிய காலம் அதுவன்றோ.
தோழமையின் பிரிவால் கண்கள் கலங்கி நிற்கும் எம் தாயும் நாங்களும் ஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளோம்
எங்களை எல்லாம்
விட்டுச் சென்ற அன்னையாம் ஆசானுக்குக் கண்ணீர்ப் பூக்களை நாம் காணிக்கை ஆக்குகிறோம்.
தங்கள் பிரிவால் துயர்படும் தங்கள் குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவிப்பதோடு அன்னையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
திருமதி. இராமலிங்கம்
ஆசிரியை குடும்பம்.
Write Tribute