1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிற்றம்பலம் சிவலிங்கம்
முன்னாள் வர்த்தகர்- சிவசங்கரி மில், இராமையன் கல், வவுனியா, கொழும்பு
வயது 80

அமரர் சிற்றம்பலம் சிவலிங்கம்
1942 -
2022
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-05-2023
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எம் வாழ்வில் நேரும் ஒரு துளி துன்பம் கண்டால்
நீங்கள் துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்