

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crystal Palace ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-11-2022
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு மூன்று ஆன போதும்
ஆறவில்லை எம் துயரம்!
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் 3ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26-11-2022 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.