Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 DEC 1960
இறப்பு 30 NOV 2019
அமரர் சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா
வயது 58
அமரர் சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா 1960 - 2019 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crystal Palace ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவலை!

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...

தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்

இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...

இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...

உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது

உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!

பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 08 Dec, 2019
நன்றி நவிலல் Sat, 28 Dec, 2019