Clicky

17ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1982
இறப்பு 17 AUG 2007
அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம்
Bachelor of Law - Bern University, Switzerland
வயது 25
அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம் 1982 - 2007 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி சிந்துஜா வில்வரட்ணம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!

தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!

ஈன்றவள் பரிதவித்தாள்
சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே
அறிந்திலனோ எங்கள் நிலை

ஆண்டுகள் 17 அல்ல
பல நூறு ஆண்டுகள் சென்றாலும்
மறவாது எங்கள் நெஞ்சம்

மலரின் உதிர்வும் மனிதனின் மறைவும்
உலகிற்கு புதிதல்ல
உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல

பிரிவின் பின்னரும்- இன்னும்
எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருக்கிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல- எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்.!!!

எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ!

நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்