Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1982
இறப்பு 17 AUG 2007
அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம்
Bachelor of Law - Bern University, Switzerland
வயது 25
அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம் 1982 - 2007 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிந்துஜா வில்வரட்ணம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!

தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!

ஈன்றவள் பரிதவித்தாள்
சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே
அறிந்திலனோ எங்கள் நிலை

வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்

எனினும் பேதை மனம்…..
நீ வாழ்ந்த உலகம் இன்று உனக்காக தவிக்கிறது
உனது வரவை எண்ணி ஏக்கமுடன் காத்திருக்கு
ஒருமுறை வாராயோ உன் திருமுகம் காட்டாயோ
அழுத விழிகளுக்கு ஆறுதல் தாராயோ. 

எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ!

நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்