Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1982
இறப்பு 17 AUG 2007
அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம்
Bachelor of Law - Bern University, Switzerland
வயது 25
அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம் 1982 - 2007 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிந்துஜா வில்வரட்ணம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பதினைந்து கடந்த பின்னும்
ஓயவில்லை நினைவலைகள்
அல்லி மலர் முகமும் முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை எம் நினைவில்...

தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திருமுகத்தை காண்பதற்கு...

தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!

இன்று வரை நாம் பதினைந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை செல்லக் கிளியே!

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்...

எங்கள் அருமைச் சகோதரியே!
எங்கு சென்றாய் எமை விட்டு
எண்ண முடியவில்லை - நீ
எம்முடன் இல்லை என்பதை!

நித்தமும் உன்னை எண்ணி
கண்ணீர் சிந்துகின்றோம்...

உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம் 
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்