

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நாகராசா அவர்கள் 03-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகறஞ்சினி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன்(கீதன்- மாவீரர்), கலைச்செல்வி, பிரியா, சதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைஇரட்ணம், ஜெயச்சந்திரன்(மதன்), வசந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மாசிலாமணி, தங்கமணி, செல்வநாயகி, செல்வச்சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஷன், கிருஷாந்தன், சுதர்சினி, தர்ஷனா, ஜஸ்வின், ஜஸ்மி, அர்வின், கிவிஷன், கிவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.