யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணபவன் சின்னத்துரை அவர்களின் நன்றி நவிலல்.
பாசம் கொண்டு அழைத்திடும் அருமை அப்பாவே
தேசம் விட்டுப்பிரிந்து மாதம் ஒன்று வந்தும்
எங்களின் அழுகையும் கவலையும் தீரவில்லை
நித்தம் உங்கள் பிரிவு எங்களை வாட்டுதே
சட்டென காலன் உயிர் பறித்தது கொடுமையன்றோ
வாசம் கொண்ட இல்லமும் இருளானதுவே
மண்ணுலகை விட்டு அப்பா மறைந்திட்டலும்
எங்கள் மனங்களை விட்டு மறைய மாட்டீர்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.