Clicky

பிறப்பு 22 MAY 1947
இறப்பு 22 NOV 2019
அமரர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம்
ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை(தரம் ஒன்று) அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட மும்மொழி(தமிழ், சிங்களம், ஆங்கிலம்) மொழிபெயர்பாளர், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி ஆணையர், இந்து கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளர், துணுக்காய் வலயக் கல்வித் திணைக்களம், வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, திட்டமிடல் செயலகம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்- நிர்வாக உத்தியோகத்தர்
வயது 72
அமரர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம் 1947 - 2019 வளலாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இளையமகள் குகதர்சனி 22 DEC 2019 Sri Lanka

‘சுடுகுதுபோ குடியன்’ என்பாள் ‘குளிருதுகாண் குடியன்’ என்பாள் எடுத்ததோர் பாணவில்லாய் என்புவளைத் தெழுந்தழுவாள் அடுக்களைக்கும் அறைக்குமாய் அங்குமிங்கு முங்களைத்தான் அலைக்கழித் திளைக்கவைப்பாள் ஆனாலுஞ் சலியாமல் ‘அதென் பேத்தி, அப்பிடித்தானென்’(று) அவள் அழுகை நிறுத்திடுவீர் நேர்வழி நின்றொழுகி நீரமைத்த வழியதனில் சீர்பெற எமை வளர்த்தீர் காலத்தின் மாற்றங்களோ - யுத்த கோலத்தின் கோரங்களோ ஞாலத்திலெமை நாடாதுகாத்தீர் எங்களுக்குத் தந்தையானீர் என் மகளின் தாயுமானீர் உமைக் காண ஓடி வந்தோம் ஒரு கனவாய் ஏன் கலைந்தீர் பெண்ணென்றால் பேயும் பேரிரக்கம் கொள்ளுமென்பார் கண்ணாயும் பெண்ணிரண்டும் கதறிப் புலம்பியதும் கண்மணியாம் ஈலிங்கி காதில் ‘தாத்தா வா’என்று கத்தியழுததுவும் கல்நெஞ்சக் கொடுங்கூற்றின் காதிலேன் ஏறவில்லை அச்சாணி இல்லாத்தேர் ஆனதுஎம் குடும்பம் எச்சாண் ஊருமினி? எங்ஙனம்? என்றேநாம் உச்சக் கவலையுற ஒருகுறையும் வைத்தகலீர் உயிர்துறக்கும் வரையுமைநீர் ஓடாய்த் தேய்த்துழைத்து உச்சத்தில் வைத்தீரெமை மிச்சமென்ன தானுளது? சுடுசொல் கடுங்கோபம் சுளையுள் பலாப்பழமுள் ‘கடுமை’யென் றறிந்தற்றைக் கூடிய கூட்டமதில், ‘காணுமினி விருந்தினர்’ கடுகடுத்த தாதிசொல்லில், கொடுநோய் ஏதுமற்று நடுநிசியண்மிக்கும் நல்ல ஏகாதசியில் கடுகதிப் பயணமொன்றில் விடுவிடென விண்ணுலகம் விரைந்த பாங்கதனில் நடுநிலைமை தனில்நின்று நயந்ததூர் உலகமுமை என்புதோல் போருடம்பு எரிதழல்வாய் வேகிடினும் அன்புமிகு நினைவுகட்கு அழிவில்லை, ஓம் சாந்தி இன்பராய், ஈற்றில்நாம் மோட்சக் கரையதனில் அன்போடு சந்திக்கும் காலமது கனியுமப்பா கண்ணான உம்பெற்றோர் கண்ணிறையழகி அத்தை கண்மணி நிறஞ்சனியோடு காத்திருங்க ளதுவரையில்...? ~ தர்ஷி.

Notices

மரண அறிவித்தல் Sun, 24 Nov, 2019
நன்றி நவிலல் Sat, 21 Dec, 2019