எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
‘சுடுகுதுபோ குடியன்’ என்பாள் ‘குளிருதுகாண் குடியன்’ என்பாள் எடுத்ததோர் பாணவில்லாய் என்புவளைத் தெழுந்தழுவாள் அடுக்களைக்கும் அறைக்குமாய் அங்குமிங்கு முங்களைத்தான் அலைக்கழித் திளைக்கவைப்பாள் ஆனாலுஞ்...