

யாழ். அச்சுவேலி கொச்சாட்டி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஆலங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி(முன்னாள் ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
குகப்பிரியா(விரிவுரையாளர்- பிரித்தானியா), குகப்பிரசாதன்(ஆசிரியர்- பிரித்தானியா), குகதர்சனி(பட்டய மனிதவள ஆலோசகர் - Chartered Human Resources Consultant, பட்டய மொழியியலாளர் - Chartered Linguist, பிரித்தானியா) ஆகியோரின் பேரன்புமிக்க தந்தையும்,
ஜெயந்தன், ரமணப்பிரியா, காலஞ்சென்ற நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகேயன், சுவாதி, சிவேஷ், தன்யா, ஈலிங்கி ஆகியோரின் வாஞ்சைமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
‘சுடுகுதுபோ குடியன்’ என்பாள் ‘குளிருதுகாண் குடியன்’ என்பாள் எடுத்ததோர் பாணவில்லாய் என்புவளைத் தெழுந்தழுவாள் அடுக்களைக்கும் அறைக்குமாய் அங்குமிங்கு முங்களைத்தான் அலைக்கழித் திளைக்கவைப்பாள் ஆனாலுஞ்...