யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இல 05. மணிக்கூட்டு ஒழுங்கையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு 31 நாட்கள் ஆனதுவே
நீங்கள் இல்லை - இன்று
நினைக்கையில் வியக்கின்றோம்
நிஜமாய் நீங்கள் இல்லை தானா?
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில் எல்லாம்
கண்முன்னே நிற்கின்றீர்கள்!
அன்பாய் ஐயா என்று
அழைத்திட யாருண்டு? இனி எமக்கு
வேதனைகளை பகிரக் கூட
வேறு வழிகள் ஏதும் இல்லையே ஐயா
வாழ்ந்திட இவ்வுலகில் நீங்கள்
வரும் காலம் வரும் என எண்ணி
வாழ்கின்றோம்......
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.