Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 22 JAN 1936
இறப்பு 04 JAN 2021
அமரர் சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.k Muthulingam)
Retired Chief Clerk Police Dept, Jaffna, RDA Office, Highways Department, Irrigation Department, Vavuniya, Mannar
வயது 84
அமரர் சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் 1936 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்றோட் , வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் அவர்களின்31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற இலக்கணத்திற்கு
அமைய எங்களை கடைசிவரை வழிநடத்திய
எங்கள் அன்பு அப்பாவே !
நாட்கள் முப்பத்தொன்றானாலும்

ஆறிடுமோ உங்கள் நினைவுகள்!
ஆயிரம் சொந்தங்களிருந்தாலும் அப்பா!
உங்களைப்போல் வருமா?
உறவுகள் எவ்வளவு பேரிருந்தாலும்

யாரப்பா நிரப்புவார் உங்களிடத்தை!
மாதம் ஒன்றாகியும் தவிக்கின்றோமே அப்பா.........
எங்கள் அப்பா நீங்களில்லாமல் ....................

உங்கள் கரங்களை பற்றிக்கொண்டு
கடந்து வந்த பாதையில் மீண்டும்
நடந்து பார்க்க ஏங்குகின்றோம் அப்பா!
கனவிலேனும் வந்து ஒருமுறை
கட்டியணைக்க மாட்டீர்களா என
கண்மூடித் தூங்குகின்றோம் அப்பா!
மறைந்து விட்டது எங்கள் மணிதீபம்
என்பதை இன்னும்மனம் ஏற்க
மறுக்கின்றது அப்பா!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

எங்கள் அப்பாவின் பிரிவுச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் எமக்கு அனுதாபங்கள், ஆறுதல்கள் தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிவித்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் , துண்டுப்பிரசுரங்கள் , Banner மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், எங்களுடன் லங்காசிறீ மூலமாக துயர் பகிர்ந்தமைக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

01-02-2021 திங்கட்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அந்தியேட்டி நடைபெறும்.

03-02-2021 புதன் கிழமை அன்று வீட்டுக்கிருத்திய கிரியைகள் அவரது வவுனியா இல்லத்தில்(குட்ஷெட் றோட், தோணிக்கல்) 08:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் மதிய போசன நிகழ்வு 12:00 மணி - 05:00 மணி வரை நடைபெறும்.

04-02-2021 வியாழக்கிழமை அன்று அவரது உடுவில் இல்லத்தில்(டச்சு றோட், நாவலடி வைரவர் கோயில் முன்பாக) மதிய போசன நிகழ்வு 12.00 மணி - 03.00 மணி நடைபெறும்.

 உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்திக்கான பிரார்த்தனையில் கலந்து திருப்தியாகி ஆசியருள அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 28 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.