1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சாந்தினி சிவானந்தன்
வயது 58
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், இந்தியா டில்லியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தினி சிவானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-10-2022
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா!
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா!
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆளாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றதேனதம்மா!
ஓராண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம்!
எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை
அணைத்திட இருந்தாலும்
அத்தனையும்
எம் அம்மாவுக்கு நிகராகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்