மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 NOV 1962
இறைவன் அடியில் 12 OCT 2021
திருமதி சாந்தினி சிவானந்தன்
வயது 58
திருமதி சாந்தினி சிவானந்தன் 1962 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், இந்தியா டில்லியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி சிவானந்தன் அவர்கள் 12-10-2021 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெனிக்கா(பிரித்தானியா), தட்சனா(பிரான்ஸ்), சனார்த்தனன்(கனடா), லவப்பிரியா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயகாந்தன்(பிரித்தானியா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), எழிழரசி(வவுனியா), தர்சன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆர்த்திக், பைரவி, ஆரா, ஆனந்த் வேலன், ஆருத், கௌதம், கௌரவ், நந்தனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

இராஜேஸ்வரி(ஜேர்மனி), இரஞ்சிதமலர்(கனடா), தயாநிதி(இலங்கை), இராஜேசினி(சுவிஸ்), கதிர்காமநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவநேசன்(இலங்கை), காலஞ்சென்ற மகேசன்(ஜேர்மனி), மற்றும் தர்சிகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா புது டில்லியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெனிக்கா விஐயகாந்தன் - மகள்
தட்சனா கேதீஸ்வரன் - மகள்
சனார்த்தனன் - மகன்
லவப்பிரியா தர்சன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices